1863 ஆம் வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி பிறந்த சுவாமி விவேகானந்தர் சிந்தனைகளின் களஞ்சியமாக விளங்கியதோடு இளைஞர்களை தனது போதனைகளால் தன் பக்கம் ஈர்த்தார். விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான விஷயங்கள் நமக்கு வழிகாட்டும் படியாக இருக்கும். ஒரு முறை  கடல் கடந்து அமெரிக்காவிற்கு சென்ற விவேகானந்தர் அங்கு மனிதனின் தோற்றமோ ஆடையோ அவர்களது அடையாளம் அல்ல என்றும் சொல்லும் செயலும் மட்டும்தான் அடையாளமாக கருதப்படும் என்று உணர்த்தி வந்தார்.

அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது அவரது தோற்றத்தை பார்த்து நகைத்தவர்கள் அமெரிக்க சகோதர சகோதரிகளே என்று அவர் பேசத் தொடங்கியதும் வாயடைத்து அவரது கருத்துக்களை வேடிக்கை பார்த்தனர். இத்தகைய மாமனிதர் நம் நாட்டில் பிறந்ததை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.