
பாலிவூட்டில் சேர்ந்து 22 ஆண்டுகளில் சில படங்கல் மட்டும் நடித்தாலும் தயாரிப்பு நிறுவனம, மருத்துவத் துறை, ரியல்எஸ்டேட் , செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் தொழிலதிபரான விவேக்கின் சொத்து மதிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இவரின் சொத்து மதிப்பு 1000 கோடியை தாண்டி உள்ளது. சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் சொகுசு காரான சில்வர்-கிரேயில் பயணித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ஒரு படத்திற்கு 3 முதல் 4 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். ஆனால் இவர் செல்வத்தின் பெரும் பகுதி தயாரிப்பு நிறுவனம் மற்றும் பிற வணிகங்களில் இருந்து வருகிறது. நிகழ்வு மேலாண்மை மற்றும் தயாரிப்பு நிறுவனம், ரியல் எஸ்டேட் போன்ற வணிகங்களை நடத்தி வருகிறார்.
இதையெல்லாம் தொடர்ந்து இவரின் காரின் சேகரிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது ₹3.11 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ, ₹4.5 கோடி மதிப்புள்ள கிரைஸ்லர் 300C லிமோசின் மற்றும் இரண்டு மெர்சிடிஸ் மாடல்கள் – GLS 350D மற்றும் GLE 250D ஆகியவற்றை வைத்திருக்கிறார். சமிபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ், ₹12.25 கோடி மதிப்புள்ள காரையும் வாங்கினார். 2019 ஆம் ஆண்டு ஜூஹூவில் பெரிய பங்களாவையும் வாங்கியுள்ளார் அந்த பங்களாவின் மதிப்பு 14 கோடி ஆகும். முக்கியமாக அவர் ஒன் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் வட இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு கல்வி, உணவு மற்றும் சுகாதாரத்தை வழங்குவதன் மூலம் ஆதரிக்கிறது.
வெற்றிகரமான படங்களில் நடித்தாலும் சினிமா துறையை விட தொழில் துறையில் இவர் அதிக பணத்தை சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.