
தமிழ் சினிமாவில் ‘புரட்சி தளபதி’ என அழைக்கப்படும் நடிகர் விஷால், கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி படங்களை அளித்து முன்னணி நடிகராக திகழ்கிறார். 2004ஆம் ஆண்டு ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘இரும்புத்திரை’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த காலங்களில் நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் காதல் வதந்திகள் இருந்ததாலும், அதன் பின்னர் அவர்களின் பிரிவு ரசிகர்களிடையே பெரும் பேச்சுக்குரிய விஷயமாக இருந்தது. ஆனால் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்தது அவரைச் சுற்றி எப்போதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், நடிகை தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அதாவது விஷால் பிறந்த நாள் அன்று திருமணம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை ‘யோகிடா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மேடையில் இருவரும் ஒன்றாக பகிர்ந்தனர்.
ரசிகர்களிடையே இது இன்ப அதிர்ச்சியாக பரவியதுடன், விஷால்-தன்ஷிகா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய புதிய பக்கங்களை திறந்துள்ளது. இந்த இருவரும் இதற்கு முன் எந்த திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2017ஆம் ஆண்டு, தன்ஷிகா நடித்த ‘விழித்திரு’ திரைப்பட விழாவில், நடிகர் டி.ராஜேந்தர், தன்ஷிகா தன் பெயரை மேடையில் கூறாததற்காக கடுமையாக விமர்சித்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விழாவில் தன்ஷிகா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது விஷால் தன்ஷிகாவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட அறிக்கைதான் இருவருக்கும் இடையில் நட்பு தொடங்க ஆரம்பித்தது. பின்னர் அந்த நட்பு காதலாக வளர்ந்தது. தற்போது வெளிவந்த தகவலின்படி, கடந்த ஒரு மாதமாக இந்த இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள்.
நேரத்தை மேலும் தாழ்த்த வேண்டாம் என முடிவெடுத்து, விரைவில் திருமணம் செய்யத் தீர்மானித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இது போன்ற உணர்ச்சிவசமான நிகழ்வுகள் குறைந்துள்ள நிலையில், இந்த திருமண அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. டி.ராஜேந்தர் தொடங்கிய ஒரு மேடை காட்சியே இன்று ஒரு திருமண வாழ்க்கைக்கு காரணமாக மாறியிருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் வரலாற்றுச் சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.