விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு திரையரங்கில் வெளியான படம் மதகஜராஜா. இந்தப் படம் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சதீஷ் மறைந்த நடிகர்களான மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாட பட குழு செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளது. அப்போது விஷால் பேசுகையில் “என்னுடைய நண்பன் நடிகர் சந்தானம்தான் படத்தின் மிகப்பெரிய தூண். சுந்தர் சி-யும் சந்தானமும் பேசினார்கள் என்றாலே காமெடி ஸ்கிரிப்ட் தயாராகிவிடும்.

பழைய சந்தானத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். சந்தானம் தற்போது கதாநாயகனாக மாறிவிட்டார். எனது ஆசை எல்லாம் அவ்வப்போது இரண்டு படங்களிலாவது காமெடியனாக அவர் நடிக்க வேண்டும். இல்லை என்றால் சுந்தர் சி படத்திலாவது அவர் காமெடியனாக நடிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.