தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டமானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் பல துறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் செயல்திட்டங்கள், பாதிப்புகளை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, வளர்ச்சியும் காலநிலை மாற்றமும் இரு கண்கள் போன்றது. அதற்கேற்ப அரசு செயல்படும் என்று தெரிவித்தார். மேலும் மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காலநிலை அறிவு இயக்கம் விரைவில் தொடங்கப்படும். வெப்ப அலைகளையும் கையாள நாம் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.