பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு சோதனையில் 3 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் அனைவரும் சென்ற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு பேருந்துகளிலும் ரயில்களிலும் சென்றார்கள். இதனால் வேலூர் சரக்கு இணை போக்குவரத்து கமிஷனர் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி, வாலாஜா, வாணியம்பாடி, பள்ளிகொண்டா உள்ளிட்டவற்றை சார்த்த சாவடிகளில் சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் சுழற்சி முறையில் ஏழு நாட்கள் போலீசார் சோதனையில் ஈடுபட்டார்கள்.

இதில் பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா? அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றார்களா? ஓட்டுனர்கள் சீருடை அணிந்திருக்கின்றனரா? தகுதி சான்று புதுப்பிக்கப்பட்டிருக்கின்றதா? முகப்பு விலக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கின்றது என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் நாளில் 877 ஆம்னி பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றில் 124 பேருந்துகள் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிகின்றது. அந்த பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை தரப்பட்டு 3,24,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வாகன சாலை வரியாக ரூபாய் 4 லட்சத்து 99 ஆயிரத்து 140 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.