தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் எஸ்ஏ சந்திரசேகர். இவர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் தளபதி விஜய். தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே எஸ்.ஏ சந்திரசேகர் தான். ஆனால் சில காரணங்களால் விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் இடையே பேச்சுவார்த்தை இல்லை. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் பற்றிய சுவாரசிய தகவலை கூறியுள்ளார்.

அதாவது நடிகர் விஜய் பள்ளி படிக்கும் காலத்தில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று விட்டு முன் வாசல் வழியாக வீட்டுக்குள் வர மாட்டாராம். அதாவது பின்வாசல் வழியாக சென்று அங்கிருக்கும் ஒரு பைப்பின் மீது ஏறி முதல் மாடிக்கு விஜய் செல்வார். அங்கிருந்து கீழே இறங்கி வந்த எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார் என எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். இவரின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.