தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். கோட் திரைப்படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். AI தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் விஜயை இளம் வாலிபரை போல காட்டி இருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகி கோட் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் மறைந்த நடிகர் விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியா ரோலில் நடித்திருந்தனர். இந்த நிலையில் கேமியா ரோலில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு தளபதி விஜய் ஒரு வாட்சை பரிசாக கொடுத்துள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.