பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. திருமண நடந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் கூறியதன் காரணமாக நயன்தாரா மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கின்றாராம்.
தற்போது செய்து கொள்ள உள்ள திருமணம் இரண்டாவது திருமணம் இல்லை. மூன்றாவது முறையாக தாலி கட்ட இருக்கின்றார். ஏற்கனவே தோஷம் நீங்குவதற்காக வாழை மரத்திற்கு தான் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இதன்பின் நயன்தாராவிற்கு தாலி கட்டினார். மீண்டும் திருமணம் நடந்தால் அது விக்னேஷ் சிவனுக்கு மூன்றாவது திருமணம் என சொல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.