தேசிய விருது பெற்ற நடிகையும் புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞருமான ஷோபனா அண்மையில் சுஹாசினி மணிரத்னத்துடன் ஒரு நேர்காணலில் தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். சிவா (1989) படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஷோபனா.

அவர் கூறியதாவது “சிவா திரைப்படத்தில் ஒரு மழை காட்சியை படமாக்கினார்கள். எனினும் அதுகுறித்து என்னிடம் சொல்லவில்லை. உடையைப் பார்த்து நான் அதை பற்றி அறிந்துகொண்டேன். இது மழை பாடல் என எனக்குப் புரிந்தது. உள்ளே உடுத்த எதுவுமில்லை. நான் வீட்டுக்கு வந்து ரெடியாகி வரலாமா என கேட்டபோது, 10 நிமிடத்தில் ஷாட் என்று கூறினார். ஆகவே இது (மழை பாடல்) திட்டமிட்ட கொலை என நினைக்கிறேன்” என்று ஷோபனா தெரிவித்தார்.