
காரைக்காலில் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்ததாக காவலர் ராஜ்குமாரின் செயல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடற்கரைக்கு வந்த ஒரு காதல் ஜோடியை மிரட்டி, ரூ.3000 ஜிபேயில் பெற்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் காவல்துறையின் மீதான நம்பிக்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் காதல் ஜோடிகளின் தனிப்பட்ட உரிமைகளை மீறுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். போலீஸ்காரர் ராஜ்குமாரின் முந்தைய பலரையும் தொந்தரவு செய்தது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் ஜோடிகள் மீது அதிகரிக்கும் துன்புறுத்தல்களும், காவலர்களின் கடமையை துஷ்பிரயோகம் செய்வது குறித்த கண்டனங்களும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
இந்த வீடியோ காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்தார்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.