SBI வங்கியானது மொத்த கால வைப்பு விகிதங்களை 25-75 bps வரை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பிப்,.15 2023 முதல் சில்லறை உள்நாட்டு டெபாசிட்கள் (ரூ. 2 கோடிக்குள்) மாற்றத்திற்கு உட்பட்டவை ஆகும். 5 வருடங்கள் மற்றும் 10 ஆண்டுகள் வரை வங்கியானது 3% முதல் 7% வரை விகிதங்களை வழங்குகிறது. இதையடுத்து தனியார் வங்கியான ஐசிஐசிஐ பெரிய நிலையான வைப்புத் தொகைகளின் வட்டி விகிதங்களை ரூபாய்.2 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. இதில் விகிதங்கள் 3% முதல் 7% வரை குறையும். மிக சமீபத்திய வைப்புத் தொகை வட்டிவிகிதங்கள் சென்ற பிப்.7-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

இதேபோல் நடப்பு ஆண்டு பிப்,.11-ம் தேதி முதல் ஆக்சிஸ் வங்கியும் ரூ.2 கோடிக்கு குறைவான வைப்புத் தொகை வட்டிவிகிதங்களை உயர்த்தியது. தனியாரில் மிகப் பெரிய கடன் வழங்குபவராக இருக்கும் ஆக்சிஸ் வங்கி, இப்போது 3.50% முதல் 7.10% வரை விகிதங்களை வழங்குகிறது. அதனைதொடர்ந்து 2 கோடிக்கு கீழுள்ள வைப்புத்தொகை வட்டி விகிதங்களானது IndusInd வங்கியில் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்போது IndusInd வங்கியானது 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் (அ) அதற்கும் மேற்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை 3.5% முதல் 7% வரை வழங்குகிறது. இரண்டு ஆண்டுகள் முதல் 3 வருடங்கள் மற்றும் 3 மாதங்கள் வரையிலான வைப்புத்தொகைக்கு, இந்த வங்கி மூத்தகுடிமக்கள் அல்லாதவர்களுக்கு அதிகபட்சம் 7.50 சதவீதமும், மூத்தகுடிமக்களுக்கு 8.25 சதவீதமும் வழங்குகிறது. கடந்த பிப். 16ம் தேதி முதல் இந்த விகிதங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.