நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற மாதம் 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது.

இந்த நிலையில் பதான் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த புது அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இப்படம் உலகளவில் ரூபாய்.865 கோடியை வசூலித்திருக்கிறது. இதை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளனர். இவ்வாறு பதான் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.