தினசரி பயன்படுத்தப்படும் சேவையாக மாறி விட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த UPI பணப் பரிவர்த்தனை வரம்பு வேறுபடும்.

அதாவது, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி ஆகிய அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் வெவ்வேறு வரம்புகளை பெறுகின்றனர். நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருப்பின், தினசரி UPI வாயிலாக ரூ.1 லட்சம் பரிவர்த்தனை செய்யலாம். அதேபோல் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களும் ரூ.1 லட்சம் வரையிலும் பரிவர்த்தனை செய்யலாம்.

எனினும் புது வாடிக்கையாளர்களுக்கு இந்த வரம்பு ரூ.5 ஆயிரம் மட்டுமே ஆகும். ICICI வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வரை UPI பரிவர்த்தனைகளை செய்யலாம். இருப்பினும் கூகுள் பே பயனர்களுக்கு இந்த வரம்பு ரூ.25 ஆயிரமாகும். அத்துடன் பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் ரூ.25 ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்யலாம். ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரையிலும் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.