விஜய் நடிப்பில் சென்ற 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. இந்த படம் குடும்ப ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வசூலை குவித்து வரும் வாரிசு தமிழகத்தில் இதுவரையிலும் ரூபாய். 63 கோடி வரை வசூல் செய்து உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜு மேல் நடிகர் விஜய் சற்று கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காரணம் வாரிசு படம் தெலுங்கில் தள்ளிப் போனது தான் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் 11 ஆம் தேதி வாரிசு படம் வெளியாவதாக இருந்தது. எனினும் திடீரென்று சில காரணங்களால் தெலுங்கில் வாரிசு படம் இரு நாட்களுக்கு பின் தேதி வெளியாகும் என தில்ராஜு அறிவித்தார். இதன் காரணமாக விஜய் சற்று அதிர்ப்பத்தி அடைந்து விட்டாராம். இதனால் தில்ராஜு மீது தளபதிக்கு கோபம் வந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.