
உத்தராகண்ட் மாநிலத்தில் தண்டல்கான் – சில்க்யாரா பகுதியை இணைக்கும் வகையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய கட்டுமானம் ஏறக்குறைய நிறைவு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த சுரங்கப்பாதையில் மொத்த நீளம் நான்கரை கிலோமீட்டர். உத்தர்காசி – யமுனோத்திரி பயணத்துரத்தை 26 கிலோமீட்டர் குறைக்கக்கூடிய வகையில் இரு வழி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் தான் சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருக்கிறார்கள்.
சுரங்கத்தினுடைய 30 மீட்டர் நீளப்பாதை உடைந்து விழுந்து இருக்கிறது. அதில் மண் கழிவுகள் இது எல்லாமே இருக்கின்றது. சுரங்கப்பாதையின் முகப்பிலிருந்து 270 மீட்டர் தூரத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இதைத் தாண்டி தான் 41 தொழிலாளர்களும் இருக்கிறார்கள். தொழிலாளர்கள் இருக்கக்கூடிய அந்தப் பகுதி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றது. இந்நிலையில் தொழிலாளர்களை மீட்கும் வகையில் பைப் வழியாக உள்ளே சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் முதல் கட்டமாக 5 தொழிலாளர்களை மீட்டு கொண்டு வந்தனர்.