உலக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கமை பரவல் வேகமாக இருக்கிறது. இந்த குரங்கமை தொற்று இந்தியாவிலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து ‌ மற்றொருவருக்கு வந்து விடக்கூடிய நோய் என்பதால் குரங்கமை பாதித்தவரிடம் இருந்து தனியாக இருக்க வேண்டும். அதன் பிறகு உலக நாடுகளுக்கு குரங்கமை பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை பிரகடனம் விடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குரங்கம்மை நோய் பரவல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சந்தேகத்திற்கு இடமான, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.