பாராளுமன்றத்தில் உள்ள தென்னிந்திய எம்.பி-க்கள் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு பதில் கடிதம் ஆங்கிலத்தில் அனுப்புவது வழக்கமாகவே உள்ளது. ஆனால் சமீப காலமாக தென்னிந்திய எம்.பி-க்கள் மத்திய மந்திரிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் இந்தியில் அனுப்புவது அதிகரித்து வந்துள்ளது. அந்த வகையில், கேரள மாநிலம் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி ஜான் பிரிட்டஸ்க்கு நடந்துள்ளது.
அதாவது ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஜான் பிரிட்டஸ் மத்திய இணை மந்திரியான ரவீந்த் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு ரவீந்திர சிங் பதில் கடிதம் இந்தியில் எழுதியுள்ளார். இதை கண்டிக்கும் வகையில் ஜான் பிரிட்டஸ் மலையாளத்தில் கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக இதே போன்று இந்தியில் கடிதம் எழுதிய இணை அமைச்சருக்கு திமுக எம்.பி அப்துல்லா தமிழில் பதில் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.