தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தனது புதிய பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் வழங்கிய வழிகாட்டுதலில் தனது பணி சிறப்பாக அமையும் என்றும், மேலும் அவர், இதை நான் பதவியாக ஏற்றுக் கொள்ளாமல் எனக்கு கிடைத்த பொறுப்பாக ஏற்று இன்னும் மக்களுக்காக அதிகம் உழைக்க வேண்டிய வாய்ப்பை முதல்வர் எனக்கு அளித்துள்ளார்.

மேலும் புதிய துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களும் விமர்சனங்களும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர், வாழ்த்து கூறிய பலருக்கும் நன்றி. மேலும் விமர்சனங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் அவர்களுக்கும் நன்றி என அவர் தெரிவித்தார்.

தனது பணியின் மூலம் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியும் என நம்பிக்கை உள்ளது. தவறுகள் இருந்தால் அவற்றை திருத்தி, தலைவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுவேன் என அவர் உறுதியளித்தார்.

மேலும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.