தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன், அவரது மனைவி தெய்வானை ஆகியோர் மாணவியிடம் நட்பாக பழகி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை தெய்வானை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

இதனையடுத்து வீட்டிலேயே இருக்குமாறு கூறிவிட்டு தெய்வானை கடைக்கு சென்று விட்டார். இதனையடுத்து தமிழ்ச்செல்வன் திடீரென வந்து வீட்டின் கதவை அடைத்துவிட்டு மாணவியின் ஆடைகளை அவிழ்க்கும் படி மிரட்டியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை கொலை செய்து விடுவேன் என தமிழ்செல்வன் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சத்தில் மாணவி அவர் கூறியபடி செய்தவுடன் செல்போனில் மாணவியை ஆபாசமாக படம் எடுத்து இதனை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். சில நாட்கள் கழித்து பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என தமிழ்ச்செல்வன் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சத்தில் பெற்றோருக்கு தெரியாமல் மாணவி வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை எடுத்து தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே மாணவியின் பெற்றோர் வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்த போது நகைகள் குறைந்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்த போது மாணவி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழ்ச்செல்வன், அவரது மனைவி தெய்வானை ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.