உலக பணக்காரர்களில் முக்கியமான டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் கடந்த வருடம் ட்விட்டரை தன் வசப்படுத்தி அது தொடர்பாக பல முடிவுகளை எடுத்தார். முதலில் ட்விட்டர் பயனர்களின் மொபைல் எண்கள் சரியானதுதானா என்பதை சோதித்து அவர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களின் முகப்பு பக்கத்தில் இது அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்பதை நிரூபிக்கும் ப்ளூ டிக் அடையாளத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். இவ்வாறு ப்ளூ டிக் பெற்றவர்கள் HD வீடியோக்களை பகிரவும், அதிக நீளம் கொண்ட வீடியோக்களை பகிரவும், ஐந்து முறை எடிட் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற வேண்டும் என்பதே சில நாட்கள் பேசுபொருள் ஆகி இருந்தது. இந்நிலையில் எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவதுப்ளூ டிக்  பெற்ற பயனர்கள் ஒரு நாளுக்கு 6000 பதிவுகளை பார்க்க முடியும், ப்ளூ டிக் பெறாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளை பார்க்க முடியும், அதே நேரம் புதிதாக ட்விட்டர் பயன்படுத்தும் பயனர்கள்நாள்  ஒன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என அறிவித்துள்ளார்.