உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார்.

இப்படி அடுத்தடுத்து ஷாக் கொடுத்து வரும் டிவிட்டர் நிறுவனம் அடுத்ததாக டேட்டா ஸ்கிராப்பிங், தகவல் ஆளுகைக்காக பயனர்களுக்கு தற்காலிக வரம்புகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. அதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்கு உள்ள பயனர்கள் ஒரு நாளைக்கு 6,000 பதிவுகளைப் பார்க்கலாம், சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 ட்விட்களைப் பார்க்கலாம், புதிதாக கணக்கு தொடங்கிய பயனர்கள் ஒரு நாளைக்கு 300 இடுகைகளை மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது