
அமெரிக்காவில் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று ஹார்வர்டு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 389 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் உலகில் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் டிரம்ப் அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதால் வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. மேலும் பல்கலைக்கழகத்திற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும், 60 பில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்தியுள்ளார்.
அந்த நடவடிக்கையால் பல்கலைக்கழகம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த சூழலில் பெல்ஜியம் நாட்டின் இளவரசியும் வருங்கால ராணியமான எலிசபெத் (23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிப்பை முடித்து உள்ளார். தற்போது ட்ரம்ப் எடுத்த உத்தரவால் இளவரசி எலிசபெத் மீதமுள்ள படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெல்ஜிய அரசு செய்தி தொடர்பாளர் கூறியதாவது, இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவு குறித்து தற்போது ஆராய்ந்து வருகிறோம். இனிவரும் நாட்களில் அந்த முடிவின் தாக்கம் தெளிவாகும்” என தெரிவித்தார்.