
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் வருகிற ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக கரோலின் லீவிட் (27) என்ற பெண்ணை நியமனம் செய்துள்ளார். இவர் முன்னதாக டிரம்பின் பிரச்சார உதவியாளராக பணியாற்றி இருந்தார்.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதோடு அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவோம் என்ற செய்தியை மக்களுக்கு வழங்க அவர் உதவுவார் என்று கூறினார். இதற்கு முன்னதாக 1969 ம் ஆண்டு ரான் ஜீக்லர் (29) என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.