அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜுவுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவதூறு பேச்சுகளை மீண்டும் மீண்டும் கேட்கும் போது அருவருப்பாக இருக்கிறது என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் கீழ்த்தரமாக பேசுகின்றனர். அவதூறாக பேசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என த்ரிஷா எச்சரித்துள்ளார்.

நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பானது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத் துறையிலிருந்துதான் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

கூவத்தூர் விவகாரத்தில் நடிகை திரிஷாவை தொடர்பு படுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு நடிகை திரிஷா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.