திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்களும் எம்.பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டதால் திருச்சி நகரமே கலவரமானது. பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழா கல்வெட்டில் எம்பி சிவாவின் பெயர் இல்லாததால் அவருடைய ஆதரவாளர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சிவா வீட்டின் முன்பு நின்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தடுக்க போலீசார் முயற்சி செய்த நிலையில், கோஸ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பெண் போலீஸ் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு தற்போது பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

இது குறித்து தற்போது பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி காவல்நிலையத்தின் அருகே இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு பெண் காவலர் காயம் அடைந்துள்ளார். தமிழகத்தில் நாங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று ஏற்கனவே கூறிக் கொண்டிருந்தோம் அதற்கு உதாரணம் தான் இது. இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பதோடு சம்பவத்திற்கு காரணமான திமுக முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்காவிடில் காவல்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய்விடும் என்று பதிவிட்டுள்ளார்.