நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால்  தான் 6 முதல் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு மிக தீவிரமானது என்றும் இந்த வழக்கை எவ்வளவு சீக்கிரத்தில் ரத்து செய்ய முடியாது என்றும் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதன்பிறகு இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில், தற்போது சீமானின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.