கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பி சென்று கொண்டிருந்தது. தமிழ்நாடு ஆந்திரா வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா செல்ல வேண்டிய ரயில் நேற்று இரவு 8.27 மணிக்கு கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருக்கும்போது, சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பெட்டிகள் வரை தடம் புரண்டனர். தற்போது வரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் புரண்டு கிடக்கும் ரயில்களை மீட்க மீட்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் 15 மணி நேரத்தில் விபத்து நடந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சரி செய்யப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, ரயில் இயக்குதல் சிக்னல், தொழில்நுட்பக் கோளாறு காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
இந்நிலையில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது என்று மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, தர்ப்பங்கா புறப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.