
ஜம்மு- காஷ்மீரில் உள்ள பூஞ்சி மாவட்டத்தில் கனிமெந்தர் பகுதியில் கடந்த மே 6ஆம் தேதி அன்று பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்தது. அந்த பயங்கர விபத்தில் சிக்கிய பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி உள்ளன.
மேலும் பேருந்து முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த மீட்பு பணியில் உள்ளூர் மக்களும் இணைந்து உதவி செய்தனர். அந்த விபத்தில் சிக்கிய பயணிகள் 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பள்ளத்தில் கிடந்த நபர்களை மீட்பு படையினர் மீட்டு மெந்தேர் துணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.