தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சுருளி அருவி பகுதியில் முகமிட்டதால் வனத்துறையினர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதைத்தனர். பின்னர் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் வரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காட்டு யானைகள் அருவி பகுதியில் இருந்து அடர்ந்த வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அதனை உறுதி செய்து வனத்துறையினர் நேற்று முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.