இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் 14 ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று பெங்களூர்- குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தனர்.

அதன் பின் களமிறங்கிய குஜராத் அணி 17.5 ஓவரிலேயே 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக பெங்களூர் அணியை வீழ்த்தியது. குஜராத் அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்களை எடுத்தனர். இந்த வெற்றியை தொடர்ந்து குஜராத் அணி தங்களது 2வது பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதே சமயத்தில் பெங்களூரு அணி தங்களது சொந்த மைதானத்தில் 44-வது தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த மோசமான அணி என்ற சாதனையை பெங்களூரு அணி சமன் செய்துள்ளது. இதற்கு முன் டெல்லி அணி தங்களது சொந்த ஊரில் உள்ள மைதானத்தில் 44 தோல்விகளை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்