ஆந்திர மாநிலத்தில் உள்ள பெனுகொண்டா பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சோதனை நடத்தியதில் குற்றவாளி கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த சுஹைல் கான் என்பது தெரிய வந்தது. இந்தத் திருட்டில் ஈடுபட்ட சுஹைல் கானை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் திருடர் கூறிய காரணத்தை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது சுஹைல் பகல் பொழுதில் மட்டுமே நகைகளை திருடுவதாகவும், திருடிய நகைகளை வீட்டிலேயே உருக வைத்து பொன் பிஸ்கட்டாகவும் தயாரித்து வந்துள்ளார். ஏனெனில் இவருக்கு இரவில் பார்வை பிரச்சனை இருந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதனால் இவர் பகல் பொழுதில் மட்டும் ஆளில்லாத வீடுகளில் திருடி வந்துள்ளார். மேலும் தங்கம் உருக்கும் முறையை youtube-ல் கற்றுக்கொண்டு அதற்கான கருவிகளை ஆன்லைனில் வாங்கி இருப்பதாகவும் திருடர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து காவல்துறையினர் அவரிடமிருந்து 350 கிராம் தங்க பிஸ்கட் மற்றும் பூட்டு உடைக்கும் கருவிகள், தங்கம் உருக்கும் மிஷின்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.