சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  இன்று ஏற்கனவே பொது விடுமுறை அறிவித்து  கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழையின் உடைய தாக்கம் தற்போதும் தொடர்ந்து வருகிறது. நாளை முற்பகலில் தான் இந்த புயல் ஆனது கரையை கடக்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கக்கூடிய சூழலில் நாளைய தினமும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளைய தினமும் பொது விடுமுறை என்று அறிவிப்பை தற்போது தமிழக அரசானது வெளியிட்டிருக்கின்றது. நாளைக்கும் பள்ளி – கல்லூரி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் எதுவுமே செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகள் உள்ளிட்ட எந்த நிதி நிறுவனங்கள் எதுவுமே செயல்படாது என்றும் மாநில யில் தற்போது தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

அதே வேளையில் மிகவும் அத்தியாவசிய தேவைகள் அனைத்துமே செயல்படும் எனவும்,  காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம், பால் வினியோகம் மற்றும் தண்ணீர் வினியோகம், மருத்துவமனை மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் மின்சாரம் வழங்குவது, பெட்ரோல் நிலையங்கள், போக்குவரத்து, ஹோட்டல், ரெஸ்டாரண்ட் மற்றும் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய அலுவலகங்கள் உள்ளிட்ட  துறைகள் அனைத்துமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.