தென் மண்டலா வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,  புயல் தீவிர புயலாக வலுவடைந்து சென்னைக்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும்  – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளை பொறுத்தவரை வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

15 இடங்களில் கனமழையும்,  59 இடங்களில் மிக கனமழையும்,  21 இடங்களில் அதி கன மழையும் பதிவாகியுள்ளது. பலத்த காற்றை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் அதிகாலை 4.15க்கு மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் அதிகாலை 3:20 க்கு மணிக்கு 71 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று  பதிவாகியுள்ளது, எண்ணூர் துறைமுகத்தில் அதிகாலை 4:15 மணிக்கு 81 கிலோமீட்டர் வேகத்தில் காற்று  பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன மழை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் அதி கன மழை கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.  திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.  5ஆம்  தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கன மழை காண க்கான வாய்ப்பு உள்ளது. இன்று இரவு வரை திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக் காற்றானது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில்,  அவ்வப்போது 80 கிலோமீட்டர் வேகத்திலும்….  விழுப்புரத்தில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 70 கிலோமீட்டர் வேகத்திலும் படிப்படியாக பின்னர் காற்றின்  வேகம் குறைய கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகம், புதுவை,காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 36 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தில் சராசரி அளவு 37 சென்டிமீட்டர். இது இயல்பை விட நான்கு சதவீதம் குறைவு என தெரிவித்தார்.