
அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது குழுவின் மீது லஞ்ச குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டுமென பல தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருமாவளவன் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் இன் நினைவு நாளை கொண்டாட அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, மதத்தை அவமதித்து பாடகி இசைவாணி பாடிய பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பதில் அளித்த திருமாவளவன், அதானி லஞ்ச குற்றம் பிரச்சனைகளை திசை திருப்புவதற்கே தமிழ்நாட்டில் இதுபோன்ற சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தி பேசுகிறார்கள்.
பாடகி இசைவாணி ஐயப்பன் திருக்கோவிலில் பெண்கள் நுழையக்கூடாது என்ற பிரச்சனை உருவானபோது, ஒரு பெண்ணாக அதற்கு எதிராக குரல் எழுப்பி அதனை தனது இசை மூலமாக வெளிக்கொண்டு வந்துள்ளார். இது ஒரு பெரியாரின் குரலாகவே கருத வேண்டும். மேலும் அந்தப் பாடலில் எந்தவித மத உணர்வுகளையும் மதத்தையும் அவமதித்து பாடப்பட்ட பாடலாக தெரியவில்லை. அதானி போன்ற மிகப்பெரிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
இதுவே தேசிய அளவிலான கோரிக்கையாகும். இதுபோன்ற பெரிய பிரச்சனையை மறைப்பதற்காகவே பாடகி இசைவாணி போன்ற சிறு சிறு பிரச்சனைகளை பெரிதுபடுத்தி காட்டுகிறார்கள். இவை நியாயமானது அல்ல. இசைவாணி பெண்ணிய குரலாகவே பாடியுள்ளார். அவரை கைது செய்வது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். இவ்வாறு திருமாவளவன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.