தமிழ்நாடு அரசு துறையில் காலியாகவுள்ள வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர், வேளாண்மைத் துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 2, 2A தேர்வு சென்ற 2022 மே மாதம் 21 ஆம் தேதி நடந்தது. அப்போது சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

இந்த குரூப்-2 முதல் நிலை தேர்வின் முடிவுகள் கடந்த 2022 நவம்பரில் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தக்கட்ட முதன்மை தேர்வு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆகவே விண்ணப்பதாரர்கள் தற்போதிலிருந்தே குரூப்-2 தேர்வுக்கு ஆயுத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் கிராமப்புறங்களிலிருந்து தேர்வுக்கு தயாராகும் நபர்கள் மற்றும் தங்களாவே தேர்வுக்கு ஆயத்தமாகும் நபர்களுக்கு உதவகூடிய அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி டிராக் என்ற தனியார் யூடியூப் சேனல் வாயிலாக மாதிரித் தேர்வு நடைபெற உள்ளது. நாளை (ஜன,.25) முதல் பிப்,.22 வரை அஞ்சல் வழியாக மாதிரி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான விபரங்களுக்கு 9003490650 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.