புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும். திருக்குறள் 10 ஆசிய மொழிகள், 14 ஐரோப்பிய மொழிகள், 14 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு அற்புதமான உன்னதமான நூல். மனிதன் மனிதனாக வாழ அறிவுரை கூறிய நூல். வள்ளுவனைப் பெற்றதால் புகழ் வையகம் பெற்றது.

எனவே திருவள்ளுவரைப் போற்றும் விதமாக திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்கட்சிகளும் சம்மதம் தெரிவித்தது. அதன் பிறகு முதல்வர் ரங்கசாமியும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க சம்மதம் தெரிவித்தார். மேலும் இதைத் தொடர்ந்து சபாநாயகர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என கூறி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினார்.