
மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாநிலம் சாபோபனில் உள்ள அழகு நிலையத்தில் TikTok லைவ் செய்து கொண்டிருந்த 23 வயது இன்ஃப்ளூயன்சர் வாலேரியா மார்க்கெஸ், அடையாளம் தெரியாத நபரால் பலமுறை துப்பாக்கிச் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவர் நேரலை ஒளிபரப்பைச் செய்தபோது, ஒரு ஆண் அழகு நிலையத்துக்குள் நுழைந்து, சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு நேரடி வீடியோவில் பதிவு செய்யப்பட்டதுடன், அதன் இறுதியில் ஒருவர் வாலேரியாவின் கைபேசியைப் பிடித்து நேரலையை நிறுத்துவது பெரும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. “வாலேரியா ‘அவர்கள் வருகிறார்கள்’ என்று கூறியவுடன், பின்னணி குரலில் ‘ஹே, வாலே?’ எனக் கேட்டதும் அவர் மீது தாக்குதல் நடந்தது. அந்த பெண் நேரத்தை நிறுத்துவதற்கு மொபைலை மட்டும் எடுத்ததுதான் விசாரணைக்கு வழிவகுக்கிறது” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வாலேரியா மார்க்கெஸ், 2002-ல் பிறந்தவர். 2021-ஆம் ஆண்டு Miss Rostro அழகிப் போட்டியில் வெற்றி பெற்று புகழ் பெற்றவர். TikTok மற்றும் Instagram-ல் 90,000-க்கும் அதிகமான பாலோயர்களை கொண்டிருந்தார். மேலும் இந்த கொலை பற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.