சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி வழங்குமாறு கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது உள் அரங்கில் பேரணியை வைத்துக் கொள்ளலாம் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து பொதுவெளியில் பேரணியை நடத்த அனுமதி வழங்குமாறு கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை தடுக்காத வகையில் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. பேரணியை முழுமையாக தடுக்கவில்லை எனவும் பிரச்சனை உள்ள இடங்களில் தான் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கடந்த 10 நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் குறித்த பிரச்சனை இருந்ததால் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து யோசிக்க நேரம் கிடைக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனையடுத்து வழக்கின் விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.