இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பின்மை என்பது மிகவும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இளைஞர்கள் பலரும் படித்து முடித்து விட்டு வேலை தேடி திண்டாடி வருகிறார்கள். குறிப்பாக உயர் படிப்பை படித்து முடித்தவர்கள் கூட இன்று வேலை இல்லாமல் இருப்பதை கண் முன்னே கண்டு வருகிறோம். இந்நிலையில் மத்திய பிரதேசம் அரசு இதுபோன்ற வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களை வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் என்று கூறுவார்கள்.

ஆனால் இனிமேல் அவர்களை அவ்வாறு அழைக்கக்கூடாது என்றும், அவர்களை “ஆர்வமுள்ள இளைஞர்கள்” என்று அழைக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த முடிவு வினோதமாக இருக்கும் பட்சத்தில் போபாலை சேர்ந்த பிரகாஷ் சன் என்ற நபர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அதாவது “நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். ஐடி துறையில் நல்ல வேலை கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் கடுமையான போட்டியின் காரணமாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு ஏராளமானவர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே தற்போது நான் டீ ஸ்டால் நடத்தி வருகிறேன்” என்று கூறினார்.மேலும் மத்திய பிரசேதத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.