உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு என்ற இலக்குடன் நடைபெற்ற மாநாட்டில் 12 தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மாநாட்டிற்கு முன்னதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை மையமாகக் கொண்டு பேசும்போது, திருமாவளவன் காமராஜருக்கு மட்டும் மரியாதை செலுத்தியதை தமிழிசை விமர்சித்தார். இது தொடர்பாக அவர், “காந்தி தான் உண்மையான மது ஒழிப்பு போராளி, அவருக்கு மரியாதை செலுத்தவில்லை” என்று குற்றம் என கூறினார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த திருமாவளவன் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், காமராஜருக்கு முதலில் மரியாதை செலுத்தி, பின்னர் தனது பணி காரணமாக நிகழ்ச்சிக்கு செல்ல நேரமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும், காந்தி போன்றவர்களை அவமதிக்கவில்லை என்றும், அவருக்கு மரியாதை செலுத்துவதில் எதுவும் குறைவில்லை என்றும் கூறினார்.

தமிழிசையின் விமர்சனத்தை கடுமையாக விமர்சித்த திருமாவளவன், “எனக்கு மது பழக்கம் இல்லை, என் வாழ்நாளில் ஒரு முறை கூட அதை தொட்டதில்லை” எனக் கூறியதுடன், தமிழிசைக்கு அது தெரிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையில் ஒருபோதும் மது உபயோகிக்காதவர் என்ற பெருமையை வெளியிட்டார்.