மத்தியில் மோடி அரசால் பிரதான் மந்திரி வயவந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று பலன் அடையலாம். சென்ற 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்திய அரசால் இந்த திட்டம் துவங்கப்பட்டது. மார்ச் 31, 2023 வரை திருமணமான தம்பதியினர் இத்திட்டத்தில் முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை பெற்று பயனடைந்துக் கொள்ளலாம். கணவன்-மனைவி இருவரும் விரும்பினால், 60 வயதுக்கு பின் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால்(எல்ஐசி) இயக்கப்படும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். கணவன்-மனைவி இரண்டு பேரும் 60 வயதை தாண்டி இருந்தால், அதிகபட்சம் ரூபாய்.15 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ளலாம். முன்னதாக இத்திட்டத்தில் அதிகபட்சம் முதலீட்டு வரம்பு ரூபாய்.7.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இதன் வரம்பு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு வழங்கும் மற்ற திட்டங்கள் உடன் ஒப்பிடும்போது ​​மூத்தகுடிமக்கள் பலரும் இத்திட்டத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

60 வயது (அ) அதற்கு அதிகமான திருமணமான தம்பதியினர் இந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். கணவன்-மனைவி இரண்டு பேரும் தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் உங்களுக்கு 7.40 % வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. உங்களது மொத்த முதலீட்டின் ஆண்டு வட்டி ரூபாய்.2,22,000, அதனை 12 மாதங்களில் பிரித்தால் உங்களுக்கு ரூபாய்.18500 ஓய்வூதியமாக கிடைக்கும். இத்திட்டத்தில் ஒருவர் மட்டும் கூட முதலீடு செய்யலாம். தற்போது நீங்கள் இத்திட்டத்தில் ரூபாய்.15 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டு வட்டி ரூபாய்.1,11,000 வரும். இதில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூபாய்.9250 கிடைக்கும். இத்திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து 10 வருடங்களுக்கு முதலீடு செய்யவேண்டும். முதலீடு செய்த 10 வருடங்களுக்கு பிறகு இருந்து உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.