சத்தீஷ்கார் மாநிலத்தில் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் 5 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பயங்கரத்தை ஏற்படுத்தியுள்ளது. சுக்மா மாவட்டத்தில் உள்ள ஏக்தால் என்ற கிராமத்தில், பழங்குடி மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் மவுசம் கண்ணா (34), அவரது மனைவி மவுசம் பிரி, மவுசம் புச்சா (34), அவரது மனைவி மவுசம் அர்ஜோ (32) மற்றும் கர்கா லச்சி(43) ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து, சவ்லம் ராஜேஷ் (21), சவ்லம் ஹித்மா, கராம் சத்யம் (35), முகேஷ் (28) மற்றும் பொடியம் என்கா ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். மாந்திரீகத்தில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய வியாழக்கிழமையன்று இதே போன்ற ஒரு சம்பவம் சத்தீஷ்கார் மாநிலத்தின் பலோதாபசார் மாவட்டத்தில் நிகழ்ந்தது, அங்கு ஒரு சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாந்திரீகம் செய்ததாகக் கூறி கொல்லப்பட்டனர்.