திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜெகதீஷ்  இறப்புக்கு போகும்போது அந்த பையன் ஃபயாசுதீன் என்ன பாத்து கத்தினா..? ஆளுநரிடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரின் தந்தை ஒருத்தர் கேள்வி கேட்டார். அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு புகார் கொடுத்து இருக்காங்க.  நீங்க எடுத்து பாருங்களேன்…

தமிழ்நாட்டு மக்கள் உங்களை சும்மா விட்டுருவாங்களா ? பிஜேபி. அது எப்படி ஆளுநரை எதிர்த்து கேள்வி கேட்கலாம் ? ஏன் கேட்டா… என்ன ? கேள்வி கேட்போம். பாயாசுதீன் அன்னைக்கு என்னை எதிர்த்து கேள்வி கேட்டான். இன்னைக்கு மேடையில் ஏத்தி பேச வச்சிருக்கேன்ல,  அந்த தைரியம் எனக்கு இருக்கு இல்ல. திரு. அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுறாங்க. நான் இந்த மேடையில சொல்றேன்… திரு.அம்மாச்சியப்பன்  வேலைக்கு நீங்க ஏதாவது பங்கம் விளைவிச்சீங்கன்னா…. ஏதாவது ஒரு பிரச்சனை பண்ணீங்கன்னா….  நாங்க சும்மா விடமாட்டோம்.

தமிழ்நாட்டு மக்களை பற்றி உங்களுக்கு தெரியாது திரு. ஆளுநர் அவர்களே…  வாக்குறுதி கொடுத்தோம். ஆனால் அந்த வாக்குறுதிக்கான முழு முயற்சியும் நம்முடைய தலைவர் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆட்சி அமைத்து முதல்வரான ஒரே மாதத்தில் ஓய்வு பெற்ற நீதி அரசர் AK.ராஜன் தலைமையில கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக்குழு தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் பண்ணாங்க. மாணவர்களை சந்திச்சாங்க….

பெற்றோர்களை சந்திச்சாங்க… ஆசிரியர்களை சந்திச்சாங்க… நீட் தேர்வினால் எவ்வளவு பாதிப்பு ? என்று அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. சட்ட மசோதா நிறைவேற்றி,  அதிமுகவும் சேர்ந்து தான் ஓட்டு போட்டான். 234 பேர்ல 230 பேர் வாக்களிச்சாங்க ஆதரவா….  அதிமுக உள்ளிட்டு. வாக்களிக்காத இந்த நாலு பேர் யார் தெரியுமா ? நான் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது…  வெளிநடப்பு செஞ்சாங்க,  பிஜேபி.  அதுக்கப்புறம் மசோதாவை திருப்பி அனுப்புறீங்க என தெரிவித்தார்.