
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் 900 நாட்களுக்கு மேலாக போராட்ட நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக தவெக தலைவர் விஜய் சார்பில் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பரந்தூர் செல்லும் விஜய்யால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தவெக தலைவர் விஜய் பரந்தூர் சென்றுள்ளார். அங்கு அவர் செல்வதால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை ஏற்று அரசுக்கு பரிந்துரையாக கூறலாம். நானும் மூன்றரை ஆண்டுகளாக பரந்தூருக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.