பொதுவாக தந்தைகள் அனைவருமே தனது குழந்தைகளிடம் பெரிதாக பாசத்தை வெளிப்படுத்துவதில்லை என்றாலும், தனது குழந்தைக்கு ஒரு துன்பம் என்றால் எந்த ஒரு தந்தையும் எதையும் செய்வதற்காக தயாராகி விடுவார்கள்.

அதுபோன்று சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. அந்த வீடியோவில், ஒரு நபர் தடுப்பூசி போடுவதற்காக தனது பெண் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Momos usa 🇺🇸 (@momos.usa)

அங்கு அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மருத்துவர் தயாராகியதும் குழந்தை அழ ஆரம்பித்தது. அதன் பின் மருத்துவர் குழந்தைக்கு ஊசி போட்டார். அதற்கு குழந்தை தான் அழுகிறது என்றால் அதைவிட அதிகமாக அவரது தந்தை அழ ஆரம்பித்தார்.

இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த வீடியோ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பார்த்த பலரும் தந்தையின் அன்புக்கு நிகர் இல்லை என பாராட்டி வருகின்றனர்.