மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே மீரா ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராம் கணேஷ் தேவார்(42) என்பவர் பேட்டிங் செய்துள்ளார். அவர் தன்னை நோக்கி வந்த பந்தை சிக்சர் அடித்து மற்ற ஊழியர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தினார். ஒரு சில நொடிகளில் யாரும் எதிர்பாராதவிதமாக ராம் கணேஷ் கீழே விழுந்தார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் முதலுதவி செய்தும் அசைவில்லாமல் அப்படியே இருந்தார். இதனால் ராம் கணேசன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராம் கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.