ஆஸ்திரேலியா கோஸ்ட்டைச் சேர்ந்த 28 வயதான இசை கலைஞர் ஜோலீன் டாசன் தனது தோற்றத்தை பூனையாக மாற்றிக் கொள்ள விரும்பியுள்ளார். அதன்படி அறுவை சிகிச்சைக்காக அவர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். இந்த பூனை போன்ற தோற்றத்தை பெறுவதற்காக ஊசி மருந்துகளுடன் கூடுதலாக ஒரு பரிசோதனை செய்து அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதுப்பிப்பு தேவை என்று உணர்ந்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரது மூக்கு, தாடையின் வடிவங்கள் மாற்றப்பட்டது. நான் பூனையுடன் நிறைய பழகி இருக்கிறேன். அதுதான் நான் அவற்றை தேர்ந்தெடுக்க காரணம். அவை நம்ப முடியாத அளவிற்கு ஸ்டைலானவை. தன்னிறைவு பெற்றவை மற்றும் சுதந்திரமானவை என்று கூறினார்.