
தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பிறகு செந்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் MLA, நெல்லை மாவட்டத்தில் இந்த ஆய்வில் ஓரிடத்தில் கூட… ஒரு துறை அதிகாரிகள் கூட ஆஜராகாமல் விடவில்லை. அனைத்து துறை அதிகாரியிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட்டு, சம்மந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களும் ஆஜரானார்கள். சில ரேங்க் ஆபீசர்கள் மட்டும் ஒன்று, இரண்டு… கீழே உள்ள ஆபீசர்கள் ஆஜரானார்கள். குறிப்பா போலீஸ் கமிஷனர்… குழு மூலமாக கலெக்டர் தகவல் தெரிவிச்சு இப்போ ஆஜராகி இருக்கின்றார்.
இந்த குழுவின் மாண்புக்கு…. இந்த குழுவினுடைய நடவடிக்கைக்கு…. ஊறு விளைவிப்பதாகவோ, பங்கம் விளைவிப்பதாகவோ எந்த ஒரு நடவடிக்கையும் இடம்பெறவில்லை. பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட செய்திகளை கூட சில அரசு அதிகாரிகள் மத்தியில் கேள்வி எழுப்பினோம். பத்திரிக்கையில் என்ன என்ன ரிப்போர்ட் ஆச்சோ… முக்கியமானது என்று குழு கருதியது, குறித்து கூட குழு அலுவலக பெருமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம்.
நாங்குநேரி சுங்கச்சாவடியை பொறுத்தவரையில், அருகாமையில் இருக்கக்கூடிய கிராமத்திலிருந்து பல்வேறு காவல்துறை வழக்குகள் இருக்கின்ற குண்டர்களை பயன்படுத்தி, பொதுமக்களோ, பத்திரிகை நண்பர்களோ, அல்லது சமூகநல ஆர்வலர்களோ.. வண்டி இல்லாமல் சொந்த வண்டியில் செல்கின்றோம் அரசு அதிகாரிகள் என சொன்னாலோ, மாவட்ட நீதிபதிகளோ ஏன் காவல்துறை அதிகாரிகள் கூட மிரட்டப்படுகிறார்கள்… சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
அது ஒருபோதும் இனி நடக்கக்கூடாது என்ற சம்பந்தப்பட்ட துணை திட்ட இயக்குனர் அவர்களையும், அந்த டோல்கேட்டின் மேலாளர் ஆந்திராவை சேர்ந்தவர்களையும், குழு நேரடியாக சென்று ஆய்வு பயணத்தில் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் இரண்டு பக்கங்களிலும் பத்திரிகையாளர்கள் உட்பட… உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முதல் குடிமகன் வரையிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் தனியாக செல்வதற்கு…
ஆட்டோமேட்டிக் பூம்பர் விழாத வண்ணம் ஒரு சாலை அமைக்கப்பட வேண்டும். அங்க போய் நிறுத்தி எம்எல்ஏ இருக்கிறாரா ? இவரு கலெக்டர் தானா ? இவரு நீதிபதி தானா என அடையாள அட்டை கேட்பது, அவர்களுடைய தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கு இழுக்கு வருகின்ற மாதிரி, அவர்களை நிற்க வைத்து, அவமானப்படுத்துவது.. அடையாள அட்டையை எடு என கூற கூடாது அப்படி கூறினால் ? மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என குழு அறிவுறுத்தி இருக்கின்றது.
இதற்காக டெல்லியில் இருந்து தேசிய ஆணையகத்தினுடைய ஒரு இயக்குனரை கள்ளக்குறிச்சி கூட்டத்தில் குழு வரவைத்து, அவர் ஆஜராக குழு உத்தரவிட்டு, அவர் ஆஜராகி, நீங்கள் சொல்லுகின்ற சில ஆலோசனைகளை எங்கள் துறை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறோம். மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அப்படி ஒரு கடிதம் எங்களுக்கு வர பெற்ற உடன் இந்த சுங்கச்சாவடிகளில் நீங்கள் சொல்வது போல் 24 மணி நேரமும், ஒரு காவல் நிலைய நியமித்து, பூமர் அமைக்காத வழியை அமைத்து, திறந்து விடுவதற்கான ஏற்பாடு செய்கின்றோம் என சொன்னார்கள். அதே போல உள்ளூர் மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களை நீங்கள் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோளை எல்லா சுங்கசாவடிக்கும் வலியுறுத்தி உள்ளேன்.
இதற்காக ஆஜரான இயக்குனர் அவர்கள்… குழு முன்பு ஆஜராகி, மாவட்ட ஆட்சி தலைவர், குழு உறுப்பினர்கள் தனியா ஒரு கூட்டம் நடத்தினோம். அதிலும் அவரிடம் சில பரிந்துரை செய்துள்ளோம். நாங்கள் சொன்ன அத்தனையும் அவர் ஏற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்துறோம்னு சொல்லி, வாக்குறுதி கொடுத்துட்டு போயிருக்கார். நம்முடைய மாவட்ட ஆட்சி தலைவருக்கு ஆளில்லாத ஆட்டோமேட்டிக் சுங்கசாவடி இல்லாமல்….. 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் செல்வதற்கு…. குறிப்பாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, மற்றபடி அனுமதிக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட சட்டமன்ற – நாடாளுமன்ற – உறுப்பினர் செல்வதற்கான பாதை 24 மணி நேரமும் திறந்தே இருக்க வேண்டும் என குழு உத்தரவிட்டுள்ளது.