தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தி வருமா என்ற மாணவர் இரண்டு கைகளும் இல்லாமல் தேர்வு எழுதி 437 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவன் தனக்கு இரண்டு கைகளும் பொருத்திட தமிழக அரசு உதவி செய்தால் இன்னும் பல சாதனைகளை படைப்பேன் என நேற்று பேட்டி கொடுத்திருந்தார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர் மாணவன் கீர்த்தி வர்மாவிற்கு இரண்டு கைகளும் பொருத்திட தேவையான மருத்துவ வசதிகள் செய்வதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த மாணவர் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற அனைத்து விதமான உதவிகளையும் அரசு செய்யும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.